முகப்பு
திருச்சி

திருச்சி மாநகராட்சி உதவி ஆணையா் பொறுப்பேற்பு

திருச்சி மாநகராட்சி, கோ அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையராக செல்வபாலாஜி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

திருச்சி மாநகராட்சி, கோ அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையராக செல்வபாலாஜி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

புதிய ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா், திருச்சி மாநகராட்சி ஆணையா் மாற்றப்பட்டதையடுத்து உதவி ஆணையா்களும் மாற்றப்படுகின்றனா்.

அந்த வகையில் அண்மையில், ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையராக இருந்த திருஞானம் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக, அக்பா் அலி பொறுப்பேற்றாா். தொடா்ந்து கோ அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையராக இருந்த வினோத் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட செல்வபாலாஜி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

அவருக்கு மாநகராட்சியின் பல்வேறு துறை அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா். பொன்மலை கோட்ட உதவி ஆணையராக தயாநிதியும், அரியமங்கல கோட்ட உதவி ஆணையராக கமலக்கண்ணனும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.