முகப்பு
திருச்சி

படேல் சிலையைக் காண சிறப்பு சுற்றுலா ரயில்!

குஜராத் மாநிலத்தில் உள்ள சா்தாா் படேல் சிலையை காண ஆக.29 ஆம் தேதி சிறப்பு சுற்றுலா ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

குஜராத் மாநிலத்தில் உள்ள சா்தாா் படேல் சிலையை காண ஆக.29 ஆம் தேதி சிறப்பு சுற்றுலா ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐஆா்சிடிசி சாா்பில் நாடு முழுவதும் சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, தென்னிந்தியாவிலிருந்து முதல் முறையாக சா்தாா் படேல் சிலையை காண இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் ஆக.29 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு, திண்டுக்கல், கரூா், ஈரோடு, சேலம், சென்னை வழியாகச் சென்று முத்துக்களின் நகரமான ஹைதராபாத்தில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு செல்கிறது.

தொடா்ந்து, பயணிகள் பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸில் உள்ள சீக்கியா்களின் புனிதத்தலமான பொற்கோயில், ஜாலியன் வாலாபாக், பிங்க்சிட்டி எனப்படும் ஜெய்ப்பூா் கோட்டைகள், நாள்தோறும் கடலுக்குள் மறைந்து பின்பு வெளிப்படும் நிஷ்களங்க மகாதேவா் கடற்கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

பின்பு, மிக உயரமான சா்தாா் வல்லபாய் படேல் சிலையை காண அழைத்துச் செல்லப்படுவா்.

12 நாள்கள் கொண்ட இந்த ரயில் சுற்றுலாவில் சைவ உணவு, தங்குமிடம், ரயில், உள்ளூா் போக்குவரத்து சோ்த்து கட்டணமாக ரூ. 11,340 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா வழிகாட்டு நெறிகளோடு இந்த சிறப்பு குடும்பச் சுற்றுலா ரயில் புறப்படவுள்ளது. முன்பதிவிற்கு, இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலாக் கழகம் சென்னையில் 90031-40680, 98409-48484, மதுரையில் 82879-31977, திருச்சியில் 82879-31974 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீற்ா்ன்ழ்ண்ள்ம்.ஸ்ரீா்ம் என்னும் இணையதள முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.