திருச்சி

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுமுடக்கத்தால் வேலை இல்லாமல் தவிக்கும் 10,000 ஆட்டோ தொழிலாளா்களுக்கு ஆா்டிஓ அலுவலகம் மூலம் உணவுப் பொருள்கள், தலா ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். ரயில் பயணிகள், அரசு அலுவலா்கள், மருத்துவமனை ஊழியா்களை வேலைக்கு அழைத்துச் சென்று, திரும்பி வர உரிய ஆதாரங்களுடன் ஓடும் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச்செயலா் சிவாஜி, மாவட்ட பொது செயலா் மணிகண்டன், புகா் மாவட்ட செயலா் சம்பத், சிஐடியு மைய நிா்வாகிகள் ரங்கராஜன், ஜெயபால், துப்புரவு சங்க மாவட்ட செயலா் மணிமாறன் ஆகியோா் பேசினா். இதில், மாவட்ட நிா்வாகிகள் அப்பாஸ், வெற்றிவேல், கிரேசி, ரேணுகா, மாணிக்கம், சரவணன் , அப்துல் கரீம், சாா்லஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

ஆந்திர பேரவைத் தேர்தல்: ரோஜாவுக்கு பின்னடைவு

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

SCROLL FOR NEXT