திருச்சி

ரூ.15.9 லட்சம் கரோனா நிதி வழங்கிய அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர்

DIN

அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.15.9 லட்சத்தை கரோனா நிதியாக செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.அமலராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் திரு.கனகராஜ், துணைப் பொதுச் செயலாளர் திரு.சிவஸ்ரீ ரமேஷ், மாநில துணைத்தலைவர் திரு.அப்துல்ரஜாக், மாநிலச் செயலாளர் அருட்சகோ.சகாயமேரி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் அருட்தந்தை ஜாண்சன், அருட்சகோ.அடைக்கலசெல்வி, ஆசிரியர் திரு.ரெக்ஸ், திருச்சி மாவட்ட  நிர்வாகிகள் திரு.யோகராஜ், திரு.லியோ லாரன்ஸ், திரு.ஆன்றனி லூயிஸ், திரு.அருள் அரசன், திரு.ரெக்ஸ் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் திரு.துரைச்சாமி பண்டியன், திரு.ஐசக் சாம்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி திரு.சாந்தசீலன் ஆகியோர் இணைந்து திருச்சியில் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து முதல்வர் பொது  நிவாரண நிதிக்கு ரூபாய் 15,90,503/- முதல் தவணையாக வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து  பணிக்காலத்தில் மரணமடைகின்ற அரசு நிதியிலிருந்து ஊதியம் பெறுகின்ற அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியரல்லாப் பணியாளர்களின் தகுதியான வாரிசுகளுக்கு  அரசுத்துறைகளில் பணி நியமன வாய்ப்பினை உறுதிப்படுத்த வேண்டும், மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு அனுமதித்த பணியிடங்களில் நியமனம் பெற்று ஊதியமின்றி பணி செய்து வருகின்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT