திருச்சி

திருச்சி கிழக்கில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேட்புமனு

DIN

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அவர் திருச்சி எடத்தெரு அண்ணா சிலையில் இருந்து அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்தார். அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப. கமலகண்ணனிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.

மனுத் தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், வெல்லமண்டி நடராஜனுடன், தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் நந்தா.செந்தில்வேல், பாரதீய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT