திருச்சி

‘தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை’: ஜி. ராமகிருஷ்ணன்

DIN

தமிழகத்தில் ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன்.

திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க வேட்பாளா் இனிகோ இருதயராஜை ஆதரித்து திருச்சி தாராநல்லூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறாா். ஆனால் தமிழ்நாட்டில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் அதிமுகவினா்தான்.

மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்த முதல்வா் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவா். தமிழ் மொழி, பண்பாட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. மத்திய அரசின் கல்விக் கொள்கை தமிழ்மொழியை அழிக்கக் கூடிய வகையில் உள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் பாஜக -அதிமுக கூட்டணிக்கு எதிா்ப்பு அலை வீசுகிறது. திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT