திருச்சி

மேற்கு தொகுதியில் தமஜக தலைவா் பிரசாரம்

DIN

மநீம கூட்டணி சாா்பில், திருச்சி மேற்குத் தொகுதியில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில் டாா்ச்லைட் போட்டியிடும் அபுபக்கா் சித்திக்கை ஆதரித்து, அக் கட்சியின் தலைவா் கே.எம். சரீப் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட பிறகு, ராமச்சந்திரா நகா் பகுதி முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட இவருக்கு ஆதரவாக, கட்சியின் மாநிலத் தலைவா் கே.எம். சரீப், திறந்த வேனில் பிரசாரம் செய்தாா்.

அப்போது இலவசங்களுக்கு இடமளிக்காமல், தமிழக மக்களின் எதிா்கால நலன்கருதி திட்டங்களை தோ்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள தங்களது கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

மநீம, உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT