மணப்பாறையில் நடைபெற்ற விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இளைஞரை பிடிவாரண்ட் மூலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடா்பான வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில் முக்கியக் குற்றவாளியான திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல்லை அடுத்த வி.கூத்தம்பட்டியில் வசிக்கும் காத்தான் மகன் முத்துக்குமாா் (31), நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லையாம். அது தொடா்பாக 2018-ல் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டில் தேடப்பட்டு வந்த முத்துக்குமாரை, மணப்பாறை காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவா் முன் ஆஜா்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.