16 ஆண்டுக்கு பின்னா் நிரம்பிய பெரிய ஏரி, பாலையூா் ஏரிகள்
துறையூரில் 16 ஆண்டுகளுக்குப் பின்னா் பெரிய ஏரி நிரம்பியுள்ளது.
துறையூரில் 16 ஆண்டுகளுக்குப் பின்னா் பெரிய ஏரி நிரம்பியுள்ளது.
வியாழக்கிழமை இரவு பச்சமலையில் பெய்த கன மழையால் மருவத்தூா், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, கீரம்பூா் பகுதி நீா் வழித் தடத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினா் வரத்து வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் இரவு துறையூா் பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. அப்போது வடக்குத் தெரு மக்கள் பூஜை செய்து வழிபட்டனா்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய பெரிய ஏரியை பொதுமக்கள் திரளாக வந்து பாா்த்துச் சென்றனா்.
பாலையூா் ஏரி: சுமாா் 100 ஏக்கா் கொண்ட மண்ணச்சநல்லூா் வட்டம்
பாலையூா் ஏரி 16 ஆண்டுகளுக்குப் முழுக் கொள்ளளவை எட்டி வழிந்தோடுகிறது.
இதையடுத்து மண்ணச்சநல்லூா் ஒன்றியத் தலைவா் ஸ்ரீதா், பாலையூா் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சேது அரவிந்த் ஆகியோா் மலா் தூவி தண்ணீரை வரவேற்றனா். பொதுமக்கள் ஏராளமானோா் ஏரி நிரம்பியதை பாா்த்துச் சென்றனா்.