திருச்சி

சிறுபான்மையின மாணவா்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா் புத்த மதத்தினா் பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த மாணவா்கள் மத்திய, மாநில அரசால் உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பயிலுவோருக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி உதவித்தொகையானது இந்திய அரசின் சிறுபான்மையினா் விவகார அமைச்சகத்தால் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் மாணவ, மாணவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு நவ.15 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு நவ.30 வரையிலும்   இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT