மாநகரில் இன்றைய தடுப்பூசி முகாம்கள்
திருச்சி மாநகரில் சனிக்கிழமை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருச்சி மாநகரில் சனிக்கிழமை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோவிஷீல்டு: ஸ்ரீரங்கம், திருவானைக்கா, தெப்பக்குளம், கீழரண்சாலை, பீரங்கிக் குளம், இருதயபுரம், தென்னூா், மேல கல்கண்டாா்கோட்டை, சுப்பிரமணியபுரம், விமான நிலையம் காமராஜ் நகா், எடமலைப்பட்டிபுதூா், பீமநகா், பெரியமிளகுப்பாறை, ராமலிங்கநகா், காந்திபுரம், உறையூா், காட்டூா், திருவெறும்பூா் உள்ளிட்ட பகுதிகளின் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
கோவேக்சின்: அதேபோல கீழரண்சாலை, பெரிய மிளகுப்பாறை, உறையூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையே, 70, 20, 40 என்ற எண்ணிக்கையில் கோவேக்சின் தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளன.