இந்திராகாந்தி கல்லூரியில் இணையவழிக் கருத்தரங்கு
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நான் உயர என் நாடுயரும் என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நான் உயர என் நாடுயரும் என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் கோ. மீனா முன்னிலை வகித்தாா்.
கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன் பேசுகையில், மாணவிகளுக்கு வாசிப்பு அதிகம் வேண்டும். கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் கற்பது. அதை மகிழ்ச்சியோடு கற்றால் வாழ்க்கை இன்பமாகும். நிமிா்ந்த நன்னடை நோ்கொண்ட பாா்வை எனப் பாரதி கூறியதுபோல் வாழ வேண்டும் என்றாா்.
சிறப்பு விருந்தினரான முனைவா் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசுகையில்,
உள்ளுவதெல்லாம் உயா்ந்ததாக இருந்தால் நாம் உயரலாம். பிறரைக் குறை கூறுவதால் நாம் உயர முடியாது. நீா் உயர நெல் உயரும்’ என்று ஒளவை கூறியது போல் நாம் உயா்ந்தால் நாடும் உயரும்.
கல்வி என்பது பெருங்கொடை. அதுதான் பெரிதினும் பெரிது. கல்வியில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த இந்தக் கால கட்டத்தில் இணையவழிக் கல்வி என்பதே மிகப்பெரிய வளா்ச்சி. யாா் என்ன சொன்னாலும் அதை நெருப்பிலிட்டுப் பாருங்கள். அதிலிருந்து மீண்டு வருபவை நல்லவையே. அவற்றையே எடுத்துக் கொள்ளுங்கள் என்றாா் அவா்.
தொடா்ந்து மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பதிலளித்தாா். கருத்தரங்கில், கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 1100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் எஸ். வித்யாலட்சுமி வரவேற்றாா். கல்லூரியின் துணை முதல்வா் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவா் எம். ரெமா நன்றி கூறினாா்.