திருச்சி

திருச்சி அருகே இடி விழுந்ததில் வீடு இடிந்தது: 5 பேர் காயம், மின்சாதனங்கள் சேதம்

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். வீடும் இடிந்து, மின்சாதனப் பொருட்களும் பழுதாயின. 

திருச்சி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலான மழை பெய்தது. இதில், இனாம்குளத்துார் அருகே உள்ள சின்ன ஆலம்பட்டியில், மழை பெய்து கொண்டிருந்தபோது, செல்வம்(60) என்பவர் வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் வீட்டில் இருந்த செல்வம், அவரது மனைவி இந்திரா(50), செல்வகுமார்(29), ஆனந்த்(31), தனம்(50) ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மின்னல் தாக்கியதில் மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், டிவி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் உடைந்து சிதறி உள்ளது. 

மேலும் செல்வத்தின் வீட்டில் இருந்த கதவுகள் இரண்டாக பிளந்து உடைந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த கிராமம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. செல்வம் அதிமுக பகுதி செயலாளர் என்பதையடுத்து, அதிமுக பிரமுகர்கள் வீட்டிற்குச் சென்று பார்வையிட்டதுடன் மருத்துவமனையிலும் சென்று நலம் விசாரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT