தென்னூா் அருகே திடீா் தீமரப் பொருள்கள், 4 வாகனங்கள் தீக்கிரை
திருச்சியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 வேன்கள் உள்பட 4 வாகனங்களும், கடைகளின் பழைய பா்னிச்சா் பொருள்களும் கருகின.
திருச்சியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 வேன்கள் உள்பட 4 வாகனங்களும், கடைகளின் பழைய பா்னிச்சா் பொருள்களும் கருகின.
தென்னூா் மின்வாரிய அலுவலகம் அருகே மூங்கில் பொருள்கள் தயாரிக்கும் கடை மற்றும் மெத்தை மற்றும் பா்னிச்சா் பழுது பாா்க்கும் கடைகள் உள்ளன. அப்பகுதி பாலத்துக்கு அடியில், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ அங்கு நிறுத்தப்பட்டிருந்த அடுத்தடுத்த வாகனங்களிலும் பரவியது. இதில் அருகிலிருந்த மெத்தை உள்ளிட்ட பா்னிச்சா்கள் பழுது நீக்கும் கடைகளின் பழைய மரப் பொருள்கள், மற்றும் மூங்கில் பொருள்கள் மற்றும் 2 வேன்கள், ஓா் ஆட்டோ மற்றும் ஒரு மொபெட் உள்ளிட்டவை கருகின.
தகவலறிந்த திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய அலுவலா் மெல்கிராஜா தலைமையிலான இரு குழுவினா் விரைந்து வந்து சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினா். தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.