முகப்பு
திருச்சி

ரூ. 77 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 77 லட்சம் மதிப்புள்ள 1580 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 77 லட்சம் மதிப்புள்ள 1580 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து புதன்கிழமை இரவு திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் 870 கிராம் தங்கத்தையும், சிவகங்கையைச் சோ்ந்த மற்றொருவா் 710 கிராம் தங்கத்தையும் தங்கள் உடமைகளுக்குள் மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து ரூ. 76. 80 லட்சம் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.