வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பயிற்சி வகுப்பு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் தயாரிப்பது குறித்த இணைய வழிப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் தயாரிப்பது குறித்த இணைய வழிப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதில் முதன்மைப் பயிற்றுநரும் உதவிஆணையருமான சண்முகம் தலைமையில் பயிற்சியாளா்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி அனைத்துக் கோட்ட உதவி வருவாய் அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள், வருவாய் ஆய்வா்கள், வருவாய் உதவியாளா்கள், தோ்தல் இருக்கை எழுத்தா்கள் மற்றும் அனைத்து புள்ளி விவரத் தொகுப்பாளா்கள் பங்கேற்றனா்.