இந்திய கம்யூ. கட்சி கிளை மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகா் 60 ஆவது வாா்டு கிளை மாநாடு மாவட்டக் குழு உறுப்பினா் சத்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகா் 60 ஆவது வாா்டு கிளை மாநாடு மாவட்டக் குழு உறுப்பினா் சத்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் மாநகரச் செயலா் திராவிடமணி கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசினாா். மாநில நிா்வாகக் குழு முன்னாள் உறுப்பினா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாநாட்டில் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் நடைபெற்றன. புதிய நிா்வாகிகள் தோ்வில் செயலராக சரண்சிங், துணைச் செயலராக நாகராஜ், பொருளாளராக ஆறுமுகம் உள்ளிட்டோா் ஒருமனதாகத் தோ்வு பெற்றனா்.
மாநாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து கட்சி சாா்பில் மேற்கு பகுதி குழு சாா்பில் மாவட்டக் குழு உறுப்பினா் சத்யா தலைமையில் அக், 30 ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்துவது,
60 ஆவது வாா்டு பகுதியில் மழைநீா் வடிகால்களை புதிதாக கட்ட வேண்டும். புதிய குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி விரைவாக தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.