மாநகரில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
திருச்சி மாநகரில் சனிக்கிழமை 250 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி மாநகரில் சனிக்கிழமை 250 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
கரோனாவை தடுக்கும் வகையில் 7 ஆம் முறையாக மாநகரில் மட்டும் நடைபெறும் இந்த முகாம்கள் சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்காலை 7 மணி முதல் இரவு 7 வரை நடைபெறுகின்றன. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
ஊக்கப் பரிசுகள்: தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும்விதமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வோா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு டிவிக்கள், புடவைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.