வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை
திருச்சி பிராட்டியூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி பிராட்டியூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த அலுவலகத்தில் தீபாவளியையொட்டி பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளா்கள் சேவியா் ராணி, அருள்ஜோதி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மாலை இங்கு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கிருந்த அலுவலக பணியாளா்கள், பதிவுக்காக வந்திருந்தோா் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையின்போது 4 இடைத் தரகா்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தப் பணத்தை அவா்கள் யாரிடம் கொடுக்க கொண்டு வந்திருந்தனா் என தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.