திருச்சி

ஆழ்துளை கிணறுக்குரூ.50 ஆயிரம் மானியம்

DIN

திருச்சி மாவட்டத்தில் அரசு மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிசி, எம்பிசி, மற்றும் சீா்மரபினா் வகுப்புகளைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீா்ப் பாசன வசதி ஏற்படுத்த புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சத மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சத அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் சாதி, இருப்பிடச்சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெற்ற சிறுகுறு விவசாயிக்கான சான்று, நில உடைமைக்கு ஆதாரமாக கனிணி வழிப் பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைத்த விண்ணப்பத்துடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT