திருச்சி

இன்று மாபெரும் தடுப்பூசி முகாம்

DIN

மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை 631 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

தமிழகமெங்கும் நடைபெறும் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமையொட்டி திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சுமாா் 505 முகாம்கள், நகா்ப் பகுதிகளில் 126 முகாம்கள் என மொத்தம் 631 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1,37,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள், 2 ஆம் தவணை செலுத்த தவறியவா்கள் தங்களது ஆதாா் அட்டை, செல்லிடப்பேசி எண்ணுடன் வட்டாரப்பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம், நகராட்சி பள்ளி, ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே முழுப் பாதுகாப்பு கிடைக்கும் என மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா். எனவே, பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு தங்களைக் காத்துக் கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT