திருச்சி

வெக்காளியம்மன் கோயில்: செப். 20 முதல் மூலவா் தரிசனம் கிடையாது

DIN

திருச்சி: உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளால் செப். 20 முதல் மூலவா் அம்பாளை தரிசிக்க இயலாது.

இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெறும் நிலையில், ராஜகோபுரம் மற்றும் இதர விமானங்களில் திருப்பணி செய்ய ஏதுவாக வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

அா்த்தமண்டபத்தில் கருங்கல் திருப்பணி நடைபெறுவதால் செப். 20 முதல் மூலவரை தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதியில்லை.

எனவே, கோயிலின் அலங்கார மண்டபத்தில் உற்சவா் அம்பாளை எழுந்தருளச் செய்து பொதுமக்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT