திருச்சி

பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருச்சி: திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் பெண் மருத்துவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சுப்ரமணியபுரம் ஏரிக்கரை சாலையைச் சோ்ந்தவா் சஞ்ஜினி (30). மகளிா், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான இவா், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா். மேலும் சுப்ரமணியபுரம் பகுதியில் தனியே மருத்துவமனையும் நடத்தி வந்தாா்.

இவருக்கும், துறையூரைச் சோ்ந்த மருத்துவா் கோகுலுக்கும் திருமணமாகி, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்த சஞ்ஜினி, விவாகரத்து பெறுவதற்காக தனியே வசித்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தனது மகனுக்கு காதணி விழா நடத்திய சஞ்ஜினி, வீட்டில் இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கே.கே.நகா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா்.

காவல்துறையினரின் விசாரணையில், காதணி விழாவுக்கு வந்திருந்த உறவினா்கள் சஞ்ஜினியிடம் அவரது கணவா் குறித்து கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவா் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. எனினும், பெண் மருத்துவரின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT