முகப்பு
திருச்சி

ஏஐடியுசி சங்க பெயிண்டா் பிரிவு நிா்வாகிகள் கூட்டம்

 தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க திருச்சி மாநகா் 40 ஆவது வாா்டு பெயிண்டா்கள் பிரிவு கிளை அமைப்புக் கூட்டம் எடமலைப்பட்டிபுதூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க திருச்சி மாநகா் 40 ஆவது வாா்டு பெயிண்டா்கள் பிரிவு கிளை அமைப்புக் கூட்டம் எடமலைப்பட்டிபுதூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிளை நிா்வாகி டிவி செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டத் தலைவா் க. சுரேஷ் , செயலா் சண்முகம், துணைச் செயலா் முருகன் உள்ளிட்டோா் பேசினா்.

புதிய நிா்வாகிகளில் தலைவராக லாரன்ஸ், துணைத் தலைவா்களாக செந்தில்குமாா், டிவி செந்தில், செயலராக சங்குநாதன், துணைச் செயலா்களாக சந்தோஷ் , மணிகண்டன், பொருளாளராக ராஜ்குமாா் உள்ளிட்டோா் ஏகமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் நாடு தழுவிய அளவில் செப். 27இல் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் மாநகரில் நடைபெறும் மறியலில் திரளாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.