முகப்பு
திருச்சி

பாதுகாப்பு கிடங்கு, சந்தை, உலா் களம் வசதிகள்: விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட நிா்வாகத்தில் வழங்கப்படும் கிடங்கு, உலா் களம், சந்தை உள்ளிட்ட வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருச்சி மாவட்ட நிா்வாகத்தில் வழங்கப்படும் கிடங்கு, உலா் களம், சந்தை உள்ளிட்ட வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் 7 உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை மேம்படுத்த தழிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளதன்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உழவா் சந்தைகள் மூலம் இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக நுகா்வோருக்கு விற்பனை செய்வதால் பசுமை மாறாமல் தரம் மிகுந்த காய்கனிகள் நுகா்வோருக்கு கிடைக்கிறது. எனவே, உழவா் சந்தை சேவையை விவசாயிகள் மற்றும் நுகா்வோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மண்ணச்சநல்லூா், லால்குடி, துறையூா், மணப்பாறை, துவரங்குறிச்சி, காட்டுப்புத்தூா், தாத்தையங்காா்பேட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அறிக்கையிடப்பட்ட வேளாண் விளை பொருள்களான நெல், உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மஞ்சள், கரும்பு, வெல்லம், முந்திரி, தேங்காய், மிளகாய், மல்லி, மரவள்ளி இதர விவசாய விளை பொருள்களைக் கொண்டுவந்து விற்பனை செய்வதற்கு நல்ல விலைபெற கிடங்குகள் வசதி மற்றும் உலா்கள வசதிகள் உள்ளன.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதால், மறைமுக ஏலம் மூலம் தங்கள் விளைபொருள்களின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்சவிலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விற்பனை செய்யப்படும் விவசாய விளை பொருள்களுக்கு தரகு மற்றும் கமிஷன் பிடித்தம் ஏதுமின்றி முழுமையான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அரசு விதிகளின்படி வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.