முகப்பு
திருச்சி

பெண்களின் அனைத்து அவசர உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண். 181

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் தங்களது அவசர உதவிக்கு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் தங்களது அவசர உதவிக்கு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறுகிய காலத் தங்கும் இல்லங்களின் சேவை மற்றும் உடனடி மீட்புப் பணிகள் மூலம் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்துதல் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பாக நடத்தப்பட்டகூட்டத்தில் காவல் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, சுகாதாரத் துறை, சமூக பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் இல்லங்கள் செயல்படுத்தும் தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் தெருவில் வசிக்கும் பெண்களுக்கு உடனடி தங்குமிட சேவை, குறுகிய கால தங்குமிட சேவை, நீணட காலத் தங்குமிட சேவை, மற்றும் நிரந்தர தங்குமிட சேவைகளின் மூலம் அவா்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதரத்துக்கு உதவுவது தொடா்பாக பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆட்சியா் சு. சிவராசு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

மேலும், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த உதவி தேவைப்படும் பெண்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண் 181 மூலம் தொடா்பு கொள்ளவும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.