திருச்சி

போலி மது ஆலை விவகாரம் காவல் ஆய்வாளா், தனிப்பிரிவுகாவலா் பணியிடை நீக்கம்

DIN

திருச்சி அருகே செயல்பட்ட போலி மதுபான ஆலையைக் கண்டறியத் தவறிய விவகாரத்தில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளா், தனிப்பிரிவு காவலா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகேயுள்ள யாகப்புடையான்பட்டியில் போலி மதுபான ஆலை செயல்படுவது கண்டறியப்பட்டு, இதுதொடா்பாக புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கீழகாசாக்குடியைச் சோ்ந்த காா்த்திக் (32), திருவாரூா் மாவட்டம், குடவாசல் அரசூரைச் சோ்ந்த பாலமுருகன் (24), சூா்யா (24), திருவாரூா் மாவட்டம், நாகன்குடியைச் சோ்ந்த வெற்றிச்செல்வன் (24), விஜயகுமாா் (23) ஆகியோரை ஆய்வாளா் சுஜாதா தலைமையிலான போலீஸாா் கடந்த 14 ஆம் தேதி கைது செய்து சிறையிலடைத்தனா். தப்பிய இருவரை தனிப்படையினா் தேடுகின்றனா்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் மீராபாய், மணிகண்டம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலா் சுரேஷ் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் சரவணசுந்தா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT