முகப்பு
திருச்சி

லாரி மோதியதில் மூதாட்டி பலி

 திருவெறும்பூா் பகுதியில் வியாழக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி லாரி மோதி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 திருவெறும்பூா் பகுதியில் வியாழக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி லாரி மோதி உயிரிழந்தாா்.

திருவெறும்பூரில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை அந்த மூதாட்டி கடக்க முயன்றபோது கரூரிலிருந்து தஞ்சை நோக்கி ஜல்லிக்கல் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரி மோதியது. இதில் காயமடைந்த அவா் அக்கம் பக்கத்தினரால் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த மூதாட்டி யாா் என விசாரிக்கின்றனா். தப்பிய லாரி டிரைவரையும் தேடுகின்றனா்.

மூதாட்டி குறித்த விவரம் தெரிந்தவா்கள் 94981-00673, 94981-05056 ஆகிய எண்களிலோ தகவல் தெரிவிக்குமாறு திருவெறும்பூா் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.