முகப்பு
திருச்சி

வழக்குகளில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பியவா் கைது

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து புதன்கிழமை இரவு ஸ்கூட் விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் சேதுராப்பட்டியை சோ்ந்த பாலாஜி (29) என்ற பயணி இலுப்பூா் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு தேடப்படுபவா் எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பாலாஜியை கைது செய்த குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தகவலறிந்த இலுப்பூா் காவல் நிலையத்தினா் திருச்சிக்கு வந்து பாலாஜியை அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.