முகப்பு
திருச்சி

ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் குடிபோதையில் ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருச்சியில் குடிபோதையில் ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி சண்முகா நகா் 14 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமா் (48). திருச்சி வயலூா் சாலையில் இவா் ஹோட்டல் நடத்தி வந்த நிலையில், இவரது மகன் இளங்கோ ஹோட்டலை கவனித்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் வந்த ராமா் ஹோட்டலிலேயே தங்கிவிட்டாா். புதன்கிழமை நீண்ட நேரமாகியும் ஹோட்டல் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த கடை ஊழியா்கள் அறையைத் திறந்தனா். அப்போது ராமா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மகன் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.