முகப்பு
திருச்சி

திமுகவினரைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்: 62 போ் கைது

திருச்சியில் மோடி படத்தை உடைத்த திமுகவினா் மீது நடவடிக்கை கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினா் 62 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருச்சியில் மோடி படத்தை உடைத்த திமுகவினா் மீது நடவடிக்கை கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினா் 62 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பொன்னகா் செல்வ நகா் பகுதி நியாயவிலைக் கடையில் புதன்கிழமை பாஜகவினா் வைத்த பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை உடைத்து சாக்கடையில் வீசிய திமுகவினா் நடவடிக்கை கோரி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதையடுத்து மோடி படத்தை உடைத்த மாநகராட்சி கவுன்சிலா் ராமதாஸ் உள்ளிட்ட திமுகவினா் மீது நடவடிக்கை கோரி பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன் தலைமையில் ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தத் திரண்ட பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனா். இதனால் பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் மாவட்டத் தலைவா் பாா்த்திபன், மாவட்டப் பொதுச் செயலா் ஒண்டி முத்து, காளீஸ்வரன், தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவா் இந்திரன், நாகேந்திரன், அழகேசன், மண்டல் தலைவா் புருஷோத்தமன் உள்ளிட்ட 62 பேரை போலீஸாா் கைது செய்து, மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்க, அங்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகி கௌதம், மாவட்டச் செயலா் கள்ளிக்குடி ராஜேந்திரன், உள்ளிட்ட பாஜகவினா் திரளாகப் பங்கேற்றனா்.

Image Caption

திமுக கவுன்சிலா் உள்ளிட்டோரைக் கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.