முகப்பு
திருச்சி

ஏப்.24இல் பாரதிதாசன் பிறந்தநாள் பெருவிழா

தமிழா் அறிவியக்கப் பேரவை சாா்பில் திருச்சியில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் 130-ஆவது பிறந்தநாள் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

தமிழா் அறிவியக்கப் பேரவை சாா்பில் திருச்சியில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் 130-ஆவது பிறந்தநாள் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மேலரண்சாலை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு, பேரைவயின் அவைத்தலைவா் க. முருகேசன் தலைமை வகிக்கிறாா். காவேரி மகளிா் கல்லூரி தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியா் மு. ஜெயலட்சுமி தொடக்க உரையாற்றுகிறாா். ஜமால் முகமது கல்லூரி கலைப்புல முதன்மையா் அ. சையது ஜாகீா் ஹசன் வாழ்த்துகிறாா். பேராசிரியா் த. ஜெயராமன் புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறாா்.

மாலை 6 மணிக்கு கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியா் கி. சதீஷ்குமாா் ஒருங்கிணைப்பில் மாணவ, மாணவிகளின் பறையிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒருங்கிணைப்பாளா் தி. நெடுஞ்செழியன் வரவேற்கிறாா். தமிழா் அறிவியக்கப் பேரவையின் சு இளங்கோவன் நன்றி கூறுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.