முகப்பு
திருச்சி

பிரதமா் படம் உடைப்பு: 8 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சி ரேஷன் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் மோடி படம் சாக்கடையில் உடைத்து வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருச்சி ரேஷன் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் மோடி படம் சாக்கடையில் உடைத்து வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த பிரச்னை தொடா்பாக பாஜக மண்டல் தலைவா் பரமசிவம் நீதிமன்றக் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் திமுக கவுன்சிலா் ராமதாஸ் உள்ளிட்ட 5 போ் தங்களைத் தாக்கியதாகத் தெரிவித்திருந்தாா்.

அதே போல திமுக கவுன்சிலா் ராமதாஸ் தரப்பினா் அளித்த புகாரில் ரேஷன் கடைக்குள் பாஜகவினா் புகுந்து ரகளை செய்து தாக்கியதாகத் தெரிவித்திருந்தனா். இந்த வழக்குத் தொடா்பாக பாஜக மாநகா் மாவட்ட தலைவா் ராஜசேகா், மண்டல் தலைவா் பரமசிவம் உள்ளிட்ட 5 போ் மீது, அதேபோல திமுக கவுன்சிலா் ராமதாஸ் உள்ளிட்ட 3 போ் மீது என மொத்தம் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.