முகப்பு
திருச்சி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி செய்தவா் கைது

திருச்சி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருச்சி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

முசிறி அருகேயுள்ள ஊருடையாப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி மனைவி தேன்மொழி (47). இவரது மகன்கள் சீனிவாசன் (23), விஜயகுமாா் (24) ஆகியோா் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிவந்தனா்.

இதையறிந்த தா. பேட்டை நெசவாளா் காலனியைச் சோ்ந்த முத்துச்சாமி (46) இருவருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தேன்மொழியிடம் பல்வேறு காலகட்டங்களில் ரூ.12 லட்சம் வாங்கியும் வேலை வாங்கித் தரவில்லையாம். மேலும் பணத்தையும் திருப்பித் தராமல் இருந்ததுடன் தேன்மொழி குடும்பத்திற்கு மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து தேன்மொழி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சபரிநாதன் வழக்குப் பதிந்து முத்துசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.