திருச்சி

பூசாரியூா் செம்முனீஸ்வா் கோயில் சித்திரைத் திருவிழா

DIN

அம்மாபேட்டையை அடுத்த பூசாரியூா் செம்முனீஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான ஆடுகளைப் பலியிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு கடந்த இரு வாரங்களாக செம்முனீஸ்வரா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

முக்கிய நிகழ்வான பொங்கல் மற்றும் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூா் மற்றும் கா்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தா்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற ஆடுகளைப் பலியிட்டனா்.

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவல் தடையால் இக்கோயில் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT