திருச்சி

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசன விழா

DIN

கிருஷ்ண ஜயந்தியையொட்டி, திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசன விழா என்ற பெயரில் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

நிகழாண்டில் வெள்ளிக்கிழமை (ஆக.19) கிருஷ்ண ஜயந்தி நடைபெறவுள்ள நிலையில், திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியிலுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கண்காட்சி நடைபெறுகிறது.

தவழும் கிருஷ்ணா், குழல் ஊதும் கிருஷ்ணா், ராதாகிருஷ்ணா், ஆலிலை கிருஷ்ணா் போன்ற பல்வேறு வகையிலான கிருஷ்ணா் சிலைகளும், பஞ்சலோக, பித்தளை, கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், மண், காகித கூழ், சந்தன மரம், வெண்மரம் போன்றவற்றில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் கிருஷ்ணரின் மண் சிலைகள் ரூ.60 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்பனையாகிறது. வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் கண்காட்சியில் சிலைகளுக்கு 10 சதவிகிதத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT