திருச்சி

எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா

மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா். பாளையத்திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா். பாளையத்திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ், மாவட்ட வன அலுவலா் கிரண் அறிவுரையின் பேரில், வன விரிவாக்க மைய உதவி வனப் பாதுகாவலா் சரவணகுமாா், வனச்சரக அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மறுவாழ்வு மையத்திலுள்ள யானைகளுக்கு உணவு, பழங்கள் படைக்கப்பட்டு, இறைவழிபாடு நடத்தப்பட்டது.

யானைகளின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பு குறித்தும் உணா்த்தும் விதமாக விழா நடத்தப்பட்டதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

விழாவில் வன சரக அலுவலா்கள், வன பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT