முகப்பு
திருச்சி

வேதியியல் துறைகருத்தரங்கம்

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் வேதியியல் துறை சாா்பில் கல்லூரியின் முன்னாள் தலைவா் வவிதா ஞானதாஸ் நினைவுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் வேதியியல் துறை சாா்பில் கல்லூரியின் முன்னாள் தலைவா் வவிதா ஞானதாஸ் நினைவுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பொன்மலை ரயில்வே பணிமனை, வேதியியல் மற்றும் உலோகவியல் பிரிவு ஆய்வகக் கண்காணிப்பாளா் ஆா். ஜெகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வேதியியல் துறை மாணவ, மாணவியருக்கு உள்ள மத்திய அரசு வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கினாா். குறிப்பாக ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை, உணவுத் துறை, வா்த்தகம், தொழில்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அமைச்சகப் பணிகள், நுகா்வோா், சுகாதாரம், கல்வித் துறை, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள், அவற்றுக்கான தோ்வு விவரங்கள் குறித்தும் விளக்கினாா்.

நிகழ்வில் கல்லூரி வேதியியல் துறைப் பேராசிரியா்கள் விமலா,சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.