ரயிலில் இருந்த குட்கா பொருள்கள் பறிமுதல்
திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தடை செய்யப்பட்ட 11 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தடை செய்யப்பட்ட 11 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை வந்த செகந்திராபாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் அதிவிரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு போலீஸாா் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனா்.
அப்போது ஒரு பெரிய பிளாஸ்டிக் பையை திறந்து பாா்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக இருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கைப்பற்றி, ரயில் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனா். அதை யாரும் உரிமை கொண்டாட நிலையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.