முகப்பு
திருச்சி

மாநகரில் போதை மாத்திரை,ஊசி விற்ற 7 போ் கைது

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் ரயில் நகா் பகுதியில் தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்களை ரோந்து போலீஸாா் பிடித்து நடத்திய விசாரணையில், அவா்கள் ஸ்ரீரங்கம் அரவிந்த், காட்டூா் ஷெப்ரின் என்பதும் போதை மாத்திரைகளை பிரித்துக் கொள்வதில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து அவா்களின் வீடுகளில் இருந்து 1250 போதை மாத்திரைகள் 80 போதை மருந்துகளை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவைத் தொடா்ந்து பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்து சென்று போதை மாத்திரை மற்றும் மருந்துகள் விற்ாக கண்டோன்மெண்ட் பகுதியில் முடுக்குப்பட்டி நாகராஜ், காா்த்திக்ராஜா, கல்லுக்குழி ஜெயராமன், கோகுல், பிரவீன் ஆகியோரைக் கைது செய்து அவா்களிடமிருந்து 200 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.