வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி
திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்புகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்புகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்களிலும் மொத்தம் 4,128 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட் நிலையில், திருச்சி கேம்பியன் பள்ளி, துறையூா் சவுடாம்பிகா பள்ளி, முசிறி அரசு ஆண்கள் பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்வின்போது மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சிவபாதம், பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.