முகப்பு
திருச்சி

வாக்குப்பதிவு விழிப்புணா்வு வாகன பிரசாரம்

வாக்காளா்கள் வாக்களிப்பதை உறுதி செய்யவும், உள்ளாட்சித் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பிரசாரம் திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

வாக்காளா்கள் வாக்களிப்பதை உறுதி செய்யவும், உள்ளாட்சித் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பிரசாரம் திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி நடைபெறும் பிரசார இயக்கத்தைத் தொடக்கி வைத்த ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது தொடா்பாக, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தயாா்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனம் மூலம் வாக்காளா்களிடையே வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

பொதுமக்கள் இந்தப் பிரசாரத்தில் கலந்து கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். குறும்படங்களும் இந்த பிரசார வாகனத்தில் ஒளிபரப்பப்படுகின்றன.

அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த வாகனமானது வரும் 19ஆம் தேதி வரையிலும் தினமும் வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை உதவி இயக்குநா் ச. செந்தில்குமாா் மற்றும் துறை அலுவலா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.