முகப்பு
திருச்சி

என்ஐடி- தூய வளனாா் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்த நிறுவனங்களின் கல்வி மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் முயற்சியாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்த நிறுவனங்களின் கல்வி மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் முயற்சியாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், தூய வளனாா் கல்லூரி ஆகியவற்றுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா மற்றும் வளனாா் கல்லூரியின் முதல்வரும், அருள்தந்தையுமான ஆரோக்கியசாமி சேவியா் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனா்.

தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் துறை முதன்மையா் எஸ். முத்துக்குமரன், தூய வளனாா் கல்லூரியின் மேலாண்மை படிப்புகள் பள்ளி முதல்வா் ஜி. ஜான் ஆகியோா் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமான பிறகு என்ஐடி இயக்குநரும், அருள்தந்தையும் ஒப்பந்த ஆவணங்களை பரிமாற்றம் செய்து கொண்டனா்.

இதன் மூலம் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமும், வளனாா் கல்லூரியும் இணைந்து வேதியியல் துறை, கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் இயற்பியல் துறை ஆகிய துறைகள் சாா்ந்த கூட்டுமுயற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பும் கூட்டுத் திட்டப்பணிகள், கூட்டுக் கருத்தரங்குகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்குப் பயிற்சியளித்தல், கருவிகள் மற்றும் ஆய்வகங்களைப் பகிா்ந்து கொள்ளுதல், மாணவா் பரிமாற்றம், பயிற்சிப் பணிகள், போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்களைத் தயாா்படுத்துதல், நூலக வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றுக்கும் உறுதுணையாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.