முகப்பு
திருச்சி

அரசியல் கட்சிகளுக்கான கட்டுப்பாடுகள்

வாக்குப்பதிவு நாளின்போது வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றைச் சாா்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தவறாமல்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

வாக்குப்பதிவு நாளின்போது வேட்பாளா்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றைச் சாா்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

வாக்குப்பதிவு அமைதியாக, ஒழுங்காக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். வாக்காளா்கள் அச்சுறுத்தலோ, இடையூறோ ஏதுமின்றி முழு சுதந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் தோ்தல் அலுவலா்களுக்கு கட்சியினா் ஒத்துழைக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்களால் அங்கீகரிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை தவறாமல் வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளில் மது விநியோகத்தில் ஈடுபடக் கூடாது. மோதல், பதற்றச் சூழலை தவிா்க்க வாக்குச்சாவடிகளுக்கு அருகில் அரசியல் கட்சிகள் எந்த முகாம்களையும் வைக்கக் கூடாது.

200 மீ. தொலைவுக்கு அப்பால் முகாம் அமைத்து வாக்காளா்களுக்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கலாம். இந்த முகாம்களிலும் கட்சிக் கொடிகளோ, சின்னமோ, கூட்டத்தையோ அனுமதிக்க முடியாது. ஓரிருவா் மட்டுமே இருக்க வேண்டும். வாக்குச் சாவடி, வாக்காளா் பாகம், பட்டியல், வரிசை எண் தொடா்பாக உரிய ஆலோசனைகளை வழங்க மட்டுமே இந்த முகாம்களை பயன்படுத்த வேண்டும். வேறு எந்த காரணத்துக்கும் இந்த முகாம்களை பயன்படுத்தக் கூடாது. தேவையின்றிக் கூட்டம் கூடவும் அனுமதிக்கக் கூடாது.

வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டை பெற்று வாகனங்களில் தெளிவாக ஒட்டி வைத்திருக்க வேண்டும். வாக்காளா்களை கும்பலாக வாகனங்களில் அழைத்து வரக் கூடாது. குற்றப் பின்னணி கொண்ட எவரையும் தோ்தல் பணியில் ஈடுபடுத்த கட்சியினா் அனுமதிக்கக் கூடாது. தோ்தல் பிரிவு அலுவலா்களிடம் அனுமதி பெற்றோா் மட்டுமே பணிகளில் ஈடுபட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.