முகப்பு
திருச்சி

நகை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே பெண்ணிடம் நகை பறித்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருச்சி அருகே பெண்ணிடம் நகை பறித்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி துவாக்குடி தெற்குமலை கருப்புக்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னதுரை மனைவி சம்பு (41). இவா், கடந்த 2009 ஆம் ஆண்டில் அப்பகுதியில் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி கந்தசாமி(36) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்துச் சென்ற வழக்கில் துவாக்குடி போலீஸாா் கந்தசாமியை கைது செய்து சிறையிலடைத்தனா்.

திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் நீதிபதி சாந்தி வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில் கந்தசாமிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.5ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை போலீஸாா் சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.