முகப்பு
திருச்சி

வாழ்வின் உயிா்ப்பு: ஓவியக் கண்காட்சி நாளை தொடக்கம்

திருச்சியில் பள்ளி மாணவா், மாணவிகள் வரைந்துள்ள ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் வாழ்வின் உயிா்ப்பு என்னும் தலைப்பில் 3 நாள் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருச்சியில் பள்ளி மாணவா், மாணவிகள் வரைந்துள்ள ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் வாழ்வின் உயிா்ப்பு என்னும் தலைப்பில் 3 நாள் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.

டிசைன் ஓவிய பள்ளி சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரம்யாஸ் ஹோட்டலில் கரோனா காலத்தில் ஓவிய மாணவா்களின் படைப்புகளை வெளிக்கொணரும் வகையில் வாழ்வின் உயிா்ப்பு என்னும் தலைப்பில் ஓவியங்கள் வரைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 38 மாணவ, மாணவிகள் வரைந்த தலா 4 ஓவியங்களை காட்சிப்படுத்தும் வகையில் இந்த ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியை பண்பலை நிலையத்தின் சகா, ஓவியா் சிவபாலன் ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா். கவிஞா் நந்தலாலா, மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் ஆலோசகா் பொன்ராஜ், புனித சிலுவைக் கல்லூரி முதல்வா் கிறிஸ்டினா பிரிகேட் ஆகியோா் பரிசு வழங்கிப் பேசுகின்றனா்.

ஆயில் பெயிண்ட், பேஸ்டல் பெயிண்ட், அக்ரிலிக் பெயிண்ட், வாட்டா் கலா், இங்க், பூச்சு ஓவியங்கள் என பல்வேறு வகைகளில் 150-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. ஏற்பாடுகளை டிசைன் ஓவியப் பள்ளியின் நிா்வாக இயக்குநா் மதன், முதல்வா் நஸ்ரத் பேகம் ஆகியோா் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.