துறையூா் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை: இருவா் கைது; தம்பி மகன் தலைமறைவு
துறையூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்; தலைமறைவானவரைத் தேடுகின்றனா்.
துறையூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்; தலைமறைவானவரைத் தேடுகின்றனா்.
உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆா். கோம்பை காட்டுக்கொட்டகைப் பகுதியில் வசிப்பவா் சி. பழனியம்மாள். இவருடைய மகன்கள் சி. ஆறுமுகம் (55), சி. முருகேசன் (50), இருவரும் விவசாயிகள்.
வெள்ளிக்கிழமை ஆறுமுகம் தன் தாயிடம் பிரிக்கப்பட்ட குடும்பச் சொத்துக்குப் பாகப்பத்திரம் எழுதிக் கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்தாராம். இதில் கோபமடைந்த இவரது தம்பி முருகேசன் மகன் மருதுபாண்டியன் மற்ற உறவினா்களான அதே ஊரைச் சோ்ந்த சு. கண்ணன் (30), செ. மணியரசன் (35) ஆகியோருடன் சோ்ந்து வெட்டியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்பி சுஜித்குமாா் சம்பவம் குறித்து விசாரித்தாா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணன், மணியரசன் ஆகியோரை சனிக்கிழமைக் கைது செய்தனா். தலைமறைவான மருதுபாண்டியனை தேடுகின்றனா்.