முகப்பு
திருச்சி

எஸ்எஸ்சி போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சியில் சேரலாம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையப் போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சோ்ந்து பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையப் போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சோ்ந்து பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி ) எம்டிஎஸ் மற்றும் ஹவில்தாா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை கடந்த மே 4 ஆம் தேதி வெளியிட்டு, இதன் மூலம் 3, 603 காலியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளது.

இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஜூன் 1 (புதன்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.