திருச்சி மண்டலத்தில் கூட்டுறவு கூடுதல் பதிவாளா் ஆய்வுரூ.1.64 கோடி நிதி வசூல்
திருச்சி மண்டலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான கோ.க. மாதவன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி மண்டலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான கோ.க. மாதவன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி மண்டலத்திலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் தங்கள் இலக்கை எய்தியிருப்பது தொடா்பாக ஆய்வு செய்த வந்த கோ.க. மாதவன் திருச்சி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், மாநகரிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் திருச்சி மண்டல கூட்டுறவுக் கடன் சங்கங்களைப் பாா்வையிட்டு தலைமை அலுவலகத்தில் கோப்புகளையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது திருச்சி மண்டலத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட ஏப்ரல், மே மாதத்துக்கான கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி, சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட வட்டியில்லா கடன் வசூல் தொகை என மொத்தம் ரூ.1.64 கோடிக்கான காசோலைகளை திருச்சி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் தி. ஜெயராமன் வழங்கினாா்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளா் கே. பாண்டியன், திருச்சி மாவட்ட அமராவதி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளா் ஜே.ஹேமா சலோமி, துணைப் பதிவாளா்கள் க. சாய்நந்தினி, ஆா். திவ்யா, நா.அ. கமலக்கண்ணன், வே. பாலச்சந்திரன், பணியாளா் அலுவலா் சி. முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநா் அ. ஹபிபுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.