முகப்பு
திருச்சி

ஜூன் 5-இல் மாநில செஸ் போட்டிகள்

மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டிகள் திருச்சியில் வரும் ஜூன் 5ஆம் தேதி நடைபெறுகின்றன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டிகள் திருச்சியில் வரும் ஜூன் 5ஆம் தேதி நடைபெறுகின்றன. 

இதுதொடா்பாக திருச்சி ஸ்டாா் சதுரங்க கழகச் செயலா் பி. இஸ்மாயில் கூறியது:

மாநில தர வரிசைப் பட்டியலுக்காக 7, 9, 11, 15 வயதுக்குள்பட்ட மற்றும் அனைத்து வயதினருக்குமான, குழந்தைகளுக்கான போட்டிகள் எனப் பிரித்து நடத்தப்படும் போட்டியில், குழந்தைகளுக்கான பிரிவில் முதல் 15 இடங்களைப் பெறும் குழந்தைகளுக்கு தனித்தனியே கோப்பைகள் வழங்கப்படும். 7 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பங்கேற்கும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும். அனைத்து வயதினா் பிரிவில் 15 பரிசுகள் வழங்கப்படும். மொத்தம் ரூ.15 ஆயிரம் மதிப்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் முன்பதிவு செய்வது அவசியம். மேலும், விவரங்களுக்கு 90434 27661, 90801 81709 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.